யூடியூப் மூலம் கொள்ளையடித்த வாலிபருக்கு கிடைத்த அதிரடி பரிசு..!!
சூரிய வம்சம் படத்தில் வருவது போல ஒரே பாட்டில் வேணால் பணக்காரனாக முடியும்.., ஆனா நிஜ வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், உழைத்து மட்டுமே முன்னேற வேண்டும். ஆனால் ஒரு சில இளைஞர்கள் சில நாட்களிலியே பணக்காரனாக வேண்டும் என்று சில குறுக்கு வழியில் சென்று சிக்கி கொள்கிறார்கள். அப்படி ஒரு இளைஞர் யூடியூப் பார்த்து, கொள்ளையடிக்க முயற்சித்து கையும் களவுமாக சிக்கி உள்ளார்..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளிவாசல் எதிரில் தனியாருக்குசொந்தமான நகை கடன் வழங்கும் மணப்புரம் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிதி நிறுவனத்தில் வத்தலக்குண்டு மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வது வழக்ககம்.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், வணிக வளாகத்துக்குள் புகுந்து பூட்டை உடைக்க முயன்றுள்ளார்.., ஆனால் முடியாமல் போனதால் நிறுவனத்தின் பின் புறம் சென்று மறைந்துள்ளார். பின் ஊழியர்கள் வந்துவுடன் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
சாவி இல்லை என ஊழியர்கள் சொன்னதும் ஆத்திரமடைந்த அந்த ஊழியர் ஷட்டரின் கதவை உடைத்துள்ளார். அப்போது அங்கிருந்த அபாய ஒலி ( Auto Alaram ) ஒலிக்கவே அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பின் அந்த மர்ம நபர் நிதி நிறுவன கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து ஓடியுள்ளார். அப்போது நிறுவன ஊழியர்கள் திருடன், திருடன் என கத்தியதால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து நிறுவனத்தில் கட்டி வைத்துள்ளனர்.
பின் இதுகுறித்து வத்தலகுண்டு காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் நேரில் வந்து விசாரணை செய்தார். அப்போது அந்த மர்ம நபர், கொடைரோட்டை சேர்ந்த அமர்நாத் (வயது 25) என்பதும் அம்மைய நாயக்கனூரில் செல்போன் கடை நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
நீண்ட நாட்களாவே இவர் இதுபோன்ற கொள்ளை முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதும் மற்றும் அந்த கொள்ளைகளை யூடியூப் பார்த்து கத்துக்கொண்டேன் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமர்நாத்தை கைது செய்தனர். அலாரம் ஒலித்ததால் நிதி நிறுவனத்தில் இருந்த சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போகாமல் காப்பாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.