பெங்களூர் கொலை வழக்கில் சிக்கிய பாஜக நிர்வாகி..!! பரபரப்பில் பெங்களூர்.!!
பெங்களூரு, ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1-ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்தில் 10 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை, பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் தனித்தனியே விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உணவகத்தில் குண்டு வைத்த குற்றவாளியை அடையாளம் கண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. மேலும், அவரைக் கண்டுபிடிக்க துப்புக்கொடுத்தால் 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், குண்டுகளைத் தயாரித்து தந்ததாக முஜாமில் ஷெரீபை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத்திடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் 2 இளைஞர்களின் வீடு, செல்போன் கடைகளில் சோதனை நடத்தியதன் அடிப்படையில், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி பாஜக நிர்வாகி சாய் பிரசாத்திடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..