தனிக்குடித்தனம் செல்ல ஆசைப்பட்ட மனைவி.. கணவர் குடும்பத்தார் மறுத்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!
மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா (வயது 34). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், அதே ஊரை சேர்ந்த இப்ராஹிம் (35) என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் 2016ஆம் ஆண்டு இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இந்து மதத்தை சேர்ந்த தீபா இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் தனது பெயரை அத்திபா என்று மாற்றி கொண்டார். தம்பதியினர் இருவரும் இருட்டை ஆண் குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் , இப்ராஹிம் மற்றும் அவரது அண்ணன் அப்துல்லாவும் தற்போது துபாயில் பணியற்றி வரும் நிலையில், இப்ராஹிம் தான் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அவரது அண்ணனிடமே கொடுத்து வந்தாகவும் அண்ணணின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திபா தனது கணவரிடம் தனிகுடித்தனம் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அறிந்த இப்ராஹிம் குடும்பத்தார் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதுடன் ஒற்றுமையாக வாழலாம் இல்லையென்றால், பிள்ளைகளை விட்டுவிட்டு நீ மட்டும் வெளியே சென்றுவிடு என்று கூறியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஆத்திபா “இவர்களிடம் என்னால் வாழ முடியாது. நான் இறந்த பிறகு என் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று செல்போனில் வீடியோ எடுத்து, அதை தனது பெற்றோருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அத்திபாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அத்திபா தற்கொலை செய்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து மாயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆத்திபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்