பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நியூசிலாந்தில் தொங்குகிறது. இதில் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்க உள்ளனர்.
1973 ஆம் ஆண்டு முதல் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் நடந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு கடைசியாக சொந்த நாட்டில் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட 12வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நியூசிலாந்தில் தொங்குகிறது.
இதில், 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
மேலும், இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும், லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
உலக கோப்பை போட்டியில் தொடக்க நாளான நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டங்களை நேரில் காண 10 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.