இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று(மார்ச்.02) 7,554 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 6,561 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,45,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 14,947 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,53,620 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று(மார்ச்.02) 223 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 142 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,14,388 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 85,680 ஆக இருந்த நிலையில்,தற்போது ஆக 77,152 குறைந்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை 1,78,02,63,222 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 21,83,976 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.