பீரோவை உடைக்காமல் நகையை திருடிய பெண்…!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்…!!
பிரபல தொழில் அதிபர் ஒருவரது வீட்டில் இருந்து 140 சவரன் தங்க நகைகளை பீரோவை உடைக்காமல் திருடிய பெண்ணை காவலர்கள் கைது செய்துள்ளனர்.. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.. இந்த சம்பவம் மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் தொழில் அதிபர் தங்கத்துரை (வயது 52) இவர் ரியல் எஸ்டேட் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். மயிலாப்பூர் அப்பா் சாமி கோவில் தெருவில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வரும் தங்கதுரை தொழில் சம்மந்தமாக வெளி மாநிலம்., வெளி ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
அப்படியாக கடந்த செப்டம்பர் 2ம் தேதி வெளி ஊருக்கு சென்று செப்டம்பர் 9ம் தேதி சென்னை திரும்பியுள்ளார்.. வீடு திரும்பிய அவர் வெளி மாவட்டத்தில் சம்பாதித்த பணத்தை பீரோவில் வைப்பதற்காக திறந்த போது பேர் அதிர்ச்சி அடைந்துள்ளார்..
அதாவது ஏற்கனவே பீரோவில் வைக்கபட்டிருந்த நகை, மற்றும் பணத்தை சரி பார்த்தார். அப்போது அதில் இருந்த 140 சவரன் தங்கநகைகள் காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதே சமயம் பீரோவின் கதவும் உடைகப்படவில்லை., வீட்டின் கதவும் உடைக்கப்படவில்லை என சந்தேகித்து வீட்டில் உள்ளவர்களிடம் இதை பற்றி கேட்டுள்ளார்., அவர்களும் நகை பணத்தை எடுக்கவில்லை என சொன்னதால்..
சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.. புகாரை ஏற்ற காவலர்கள் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்..
காவலர்கள் தங்கதுரை வீட்டிற்கே நேரடியாக வந்து விசாரணை செய்த போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்படாமல் இருப்பதால்., இந்த திருட்டை நன்கு தெரிந்தவர்கள் அல்லது வீட்டில் உள்ளவர்கள் தான் யாரவது செய்து இருப்பார்கள் என சந்தேகித்த காலவர்கள் தங்கதுரையின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வேலைக்காரர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.., அதாவது மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வசித்து வரும் பிரேமா (வயது 47) என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.. அதன் பின் காவலர்கள் அந்த பெண்ணிடம் அடுகடுக்கான கேள்விகளை முன் வைத்த போது தான் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். 140 சவரன் வரை தங்க நகைகள் திருட்டு போய் உள்ள நிலையில் ஒரே அடியாக மொத்த நகையும் திருட்டு போனால் சிக்கிகொள்வோம் என்ற பயத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நகையாக திருடி சென்றதாக தெரிவித்துள்ளார்..
அதன் பின் பிரேமாவிடம் இருந்து காவலர்கள் 70 சவரன் தங்கநகையை மீட்டு தங்கதுரையிடம் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள நகைகள் எங்கு உள்ளது என்று விசாரணை செய்து வருகின்றனர்.. உறவுக்காரர்கள் என்று நம்பி வீட்டுக்குள் விட்டதற்கு திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..