சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து..!! 30க்கும் மேற்ப்பட்ட வீடுகள்..!! வேதனையில் மக்கள்..!!
சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி கிராமம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 30 வீடுகள் சேதம் அடைந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்..
தீபாவளி வரும் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பட்டாசு தயாரித்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் முதலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்., ஆனால் விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு விதிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.. இந்த விதிகளானது பட்டாசு ஆலைகளில் பின்பற்ற விட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது..
இந்நிலையில் இன்று சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி கிராமம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை., ஆனால் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வீடுகளில் இருந்த டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளது., மேலும் வெடி விபத்து ஏற்பட்டவுடன் மின்சாராம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது..
வெடி விபத்தால் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 40 எரிவாயு சிலிண்டர்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் இந்த திடீர் விபத்துக்கான காரணம் குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..