இலங்கையில் வென்ற மூன்றெழுத்து மந்திரம்..!! ஊழலுக்கு எதிரான ஏகேடி குரல்..!!
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் வெறும் 3.1 சதவீத வாக்குகளை மற்றுமே பெற்ற அநுர குமார திசநாயக்க இந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கையில் “ஏகேடி” எனும் மூன்றெழுத்து மந்திரம் வென்றுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலானது நேற்று முன்தினம் மும்முனை போட்டியாக இலங்கையில் நடைபெற்று முடிந்தது., இந்த தேர்தல் முடிவானது நேற்று மாலை வெளியிடப்பட்டது., நடந்து முடிந்த இலங்கை தேர்தலில் “AKD” எனும் மூன்றெழுத்து மந்திரமே மக்களின் மனங்களை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் AKD என்று அழைக்கப்படும் அநுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார்., ஆனால் அந்த ஆண்டில் அவருக்கு 3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தனது நிலையை பல மடங்கு உயர்த்தி சாதித்துக் காட்டியுள்ளார் அநுர குமார திசநாயக்க.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் இலங்கையில் ஜனதா விம்முக்தி பெரமுன (JVP) – என்.பி.பி கூட்டணியானது ஆட்சியை பிடித்தது. ஜெவிபி தலைவர் அனுர குமார திசநாயக இலங்கையின் 9வது அதிபராக தேர்வு செய்யபட்டார்., இலங்கையில் நடந்து முடிந்த பொருளாதார நிலையின்மை பிரச்சனைக்கு பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இது.. இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் அநுர அடுத்த என்ன திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்த போகிறார் என்ற எதிர்பார்ப்பே அதிகரித்துள்ளது என சொல்லலாம்..
நேற்று வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிய முதல் சுற்றிலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தார். முதல் சுற்றில் அநுர 42.31% வாக்குகள் பெற்று முதல் இடத்திலும்., சஜித் பிரேமதாச 32.76% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், ரணில் விக்ரமசிங்கவ் 17.27% வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.,
அதிபராக தேர்வு செய்யபடுபவர் 50% வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்பதால் இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டது. இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அநுர குமார திஸாநாயக்க 57,40,179 வாக்குகளும்., சஜித் பிரேமதாச 45,30,902 வாக்குகளும் பெற்றார்., இந்த இலங்கை அதிபர் தேர்தலில் 38 பேர் போட்டியிட்ட நிலையில் அநுர குமார திசநாயக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்..
இடதுசாரி கொள்கைகளை அடிப்படையாக கொண்டுள்ள இக்கட்சி இலங்கையில் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது.. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்கேட்டால் இலங்கை முழுவதும் சின்னாபின்னமானது இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தான் அநுர குமார ஆட்சிக்கு வந்து இருப்பாதாக சிலர் கருத்து கூறினாலும்., முந்தைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்த சூழலில் அரசியல் கட்சி தலைவர்கள் செய்த ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் அநுர என்று மற்றும் மக்கள் கூறுகின்றனர்..
நடந்து முடிந்த இந்த அதிபர் தேர்தலில் அரசில் புரையோடியுள்ள ஊழல் மற்றும் முறைகேடான நிர்வாக அமைப்பை முற்றிலுமாக மாற்றுவதாக தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த அநுர குமார திசநாயக, முந்தைய அரசுகள், இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்ததைச் சுட்டிக்காட்டி, இந்த முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள், நாட்டையே நான் மாற்றிக் காட்டுகிறேன் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
கடந்த தேர்தலில் அநுர குமார திசநாயக்கவுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர். ஊழலுக்கு எதிரான ஏகேடியின் குரல்கள் புதிய தலைமுறையினரை ஈர்த்தன. இலங்கையை சீரமைப்பதாக அநுர குமார திசநாயக கொடுத்த வாக்குறுதி அளித்த நம்பிக்கை இன்றைக்கு அவரை ஆட்சி அரியணையில் அமர்த்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..