பொதுச்செயலாளர் வைகோ 81..!! அன்னதானம்., ரத்தக்கொடை..!! மாவட்டம் முழுவதும் கொண்டாட்டம்..!!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் இளைஞர் அணியின் சார்பில் 81 யூனிட் ரத்தக்கொடை வழங்கப்பட்டது..
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று மாவட்டம் முழுவதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கோவை மண்டல இளைஞர் அணி சார்பில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில் ரத்ததான முகாம் திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர். நாகராஜ், தெற்கு மாவட்ட செயலாளர். தமிழரசு, ஆகியோர் கலந்துகொண்டு ரத்ததான முகாமினை துவக்கி வைத்தனர். மேலும் வைகோ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 81 நபர்கள் தங்களது ரத்தக் கொடியினை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் முருகேஷ், இளைஞர் அணியின் திருப்பூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர். தமிழ்செல்வன், திருப்பூர் மாநகர் மாவட்ட அமைப்பாளர். சுரேஷ்,கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர். சந்தோஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர். சக்தி, கோவை தெற்கு மாவட்ட அமைப்பாளர். ரமேஷ் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர். வைகோ அவர்களின் பிறந்தநாள் விழாவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது..
இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில் அன்னதான நிகழ்ச்சி நெசவாளர் அணி மாநில செயலாளர் திருநாவுக்கரசு, திருப்பூர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் குமார் ஆகியோரது தலைமையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு திருப்பூர் மாநகரில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு நேரடியாகச் சென்று அன்னதானம் வழங்கினார்கள்..
முன்னதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாண்டியன் நகர் பகுதி கழகச் செயலாளர் செந்தில், பகுதி கழகச் செயலாளர்.சோமசேகரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள்.சுப்பிரமணி, சஞ்சய் காந்தி, முனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..