பீகார் மாநிலத்தில் தாயின் கடைசி ஆசையை நிரைவேற்ற தனது திருமணத்தை ஐசியு வார்டிலேயே நடத்திய சம்பவம் அம்மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்திலுள்ள பாலி என்ற கிராமத்தை சார்ந்த பூனம் வர்மா என்பவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையியல் அவரது மகள் சாந்தினி குமாரிக்கு அடுத்த நாள் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் பூனம் வர்மாவிற்கு உடல்நிலை மோசமடைந்து மருத்துவமணையில் சேர்த்தனர். அதை தொடர்ந்து அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போது வேண்டுமானாலும் அவர் இறந்து விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தா பூர்ண தனது கடைசி ஆசியாக தன மகளின் திருமணத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டார். இதனால் ஐசியுவிலேயே சாந்தினி குமாரி அவரது தாயின் கண் முன்னே திருமணம் செய்து கொண்டு அவரின் ஆசையை நிறைவேற்றினார். இருப்பினும், திருமணம் ஆனா அடுத்த 2 மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது மகள் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்