“ஏம்மா ஏய்”.., என்று சொன்னவரின் குரல் இனி…!!
வாலி படத்தில் துணை நடிகராகவும், பரையேறும் பெருமாள், மருது, பைரவா போன்ற பல படத்தில் நடித்திருந்தாலும்
எதிர்நீச்சல் சீரியலில் “ஏம்மா ஏ” என்ற வசனம் மூலம் பலரின் மனதையும் கவர்ந்தவர்.., மாரிமுத்து என்கிற குணசேகரன்.
இன்று காலை டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மாரடைப்பு காரணமாக காலமானார்.
அன்னாரின் உடலுக்கு சீரியல் பிரபலங்கள்.., சின்னதிரை நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், நடிகர் பிரசன்னா, பிரபல நடிகை வடிவுகரசி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாரிமுத்துவின் தம்பி பேட்டி :
ராமசந்திரன் அவருடைய தம்பி 1987 சென்னை வந்தோம் நிறைய கஷ்டப்பட்டுதான் முன்னுக்கு வந்தாரு. இந்த இழப்பை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் வேற வழியில்லை.
வேற ஏதாவது முடியும்னா செய்யலாம். சொந்த ஊரான தேனிக்கு கொண்டுபோறோம். எனக்குதான் டாக்டர் முதல போன் பண்ணாரு காலைல 8.30 மணிக்கு.
நான் போனதும் சொல்லிட்டாரு இல்ல சார் ஒன்னும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க. நாங்க 8 பேரு 4 அக்கா 4 அண்ணத்தம்பி எல்லாரும் ஊருல இருகாங்க.
பொருளாதார ரீதியா நல்ல இருந்தாரு ராமபுரத்துல 2 கோடிக்கு வீடு வாங்குனாரு. பையன் ஈவென்ட் மேனஜர் ஆஹ் இருக்கான்
பொண்ணு அகவுண்ட்ஸ் ஆபிசர் ஆஹ் இருகாங்க ஒன்னும் பிரச்னை இல்லை.
நாளைக்கு காலையில சொந்த ஊரு தேனி பக்கத்துல கிராமம் வருசநாடுல இறுதி சடங்கு பண்ணப்போறோம்.
இங்க இருந்து 3-4 மணிக்கு மீடியா அவுங்க கோலிகுக் முடிச்சதும் கெளம்புறோம் இங்கிருந்து 500 கிலோமீட்டர் சொந்தங்கள் எல்லாம் அங்கதான் இருகாங்க.
500-600 குடும்பங்கள் இருகாங்க அவருடைய சினிமா விசயத்துல நான் தலையிட மாட்டான் அவருடைய பர்சனல் விஷயத்துலதான் நான் தலையிடுவன் அவருடைய சினிமாக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.
திரைஉலகினர் மனதில் மட்டுமின்றி “ஏம்மா ஏய் ” என்ற வசனம் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த அவரின் ஆத்மா சாந்தி அடைய.., இறைவனை வேண்டிக்கொள்வோம்.
- ✒️கெளசல்யா
Discussion about this post