மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது நமது தமிழகத்தில் கல்விக்காக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது : சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்
சென்னை எழும்பூரில் உள்ள சென்னை சமூகப்பணி கல்லூரியில் (MSSW) சார்பில் உலக எழுத்தறிவு தின நாள் நிகழ்ச்சி நடைபெற்றது, சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், அரசு பெண்கள் மேல்நிலைப் மாணவர்கள், மற்றும் சென்னை சமூகப் பணியின் கல்லூரியின் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய மாநகர மேயர் பிரியா ராஜன்,
உலக எழுத்தறிவு தினத்தை எத்தனை கல்லூரியில் கொண்டாடினார்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனாலும் இந்த கல்லூரியில் இந்த தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடி வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது, இந்த நாள் என்பது ஒரு முக்கியமான நாள் அனைவருக்கும் எழுத படிக்க தெரிய வேண்டும் என்று நோக்கத்தோடு கொண்டாடப்படும் இந்த தினத்தை கொண்டாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்மை விட்டு பிரியாத இருப்பது நாம் கற்றுக் கொள்ளும் கல்வி மட்டுமே,
எந்த சூழ்நிலையில் நம்மை விட்டு பிரிக்க முடியாத ஒன்று கல்வி, நமக்கு தன்னம்பிக்கை அளிப்பது இந்த கல்வி ஒன்று தான்,படிப்பின் முக்கியத்துவம் குறித்து நமக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து கூறியிருக்கிறார் மாணவர்கள் கனவு காண வேண்டும் என்றும் நான் தூங்கும் பொழுது வருவது கனவு இல்லை நம்மை தூங்க விடாமல் செய்வது தான் நமது கனவு என்று கூறினார்,
ஆகையால் உங்கள் கனவை நோக்கி நீங்கள் உங்களுக்கு என்று ஒரு இலக்கை வைத்துக் கொண்டு அதை நோக்கி பயணிக்க வேண்டும், நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று ஒரு நினைவு இருந்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க முடியும், இங்கே இருக்கும் பெண்களாகிய நீங்கள் உங்களை நினைத்து நீங்கள் பெருமைப்படும் அனைவருக்கும் உங்கள் பெற்றோர்கள் உங்களை குறித்து பெருமைப்படும் அனைவருக்கும் நீங்கள் நன்றாக படித்து சமுதாயத்தில் வளர வேண்டும்,
அதேபோன்று இந்த கல்லூரி மாணவ மாணவிகள் அநேக போட்டிகள் நடத்தி இந்த தினத்தைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், நமது முதலமைச்சரும் தமிழ்நாட்டுக்காக அநேக கல்வி திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார், என்னும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி சிற்பி போன்ற அனேக திட்டங்களை கொண்டு வந்துள்ளார், இத்திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,
மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் இந்த அளவுக்கு அரசு கல்விக்காக முக்கியத்துவம் அளிக்கிறது,