அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவருடன் விவாதத்தில் ஈடுபடலாம், ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக திரித்துக் கூறுவது தவறு.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். இதைப் பிடித்துக்கொண்ட பாஜக மற்றும் இந்துத்துவவாதிகள் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் எனக் கூறியதாக கட்டுக்கதை கட்டி எதிர்ப்புக் குரலை தெரிவித்து வருகின்றனர். அதற்கு நேர்மாறாக இடது சாரிகள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில்,
‘ஒரு கருத்துக்கு குடிமக்கள் உடன்படாமல் போவதும் , தொடர்ந்து விவாதத்தில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் தான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம். சரியான கேள்விகளைக் கேட்பது முக்கியமான பதில்களுக்கு வழிவகுத்து சிறந்த சமூகமாக நமது வளர்ச்சிக்கு பங்களித்தது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் கற்பித்துள்ளது.
சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு, அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவருடன் விவாதத்தில் ஈடுபடலாம், ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக திரித்துக் கூறுவது தவறு.
ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது, அது தொடர்ந்தும் இருக்கும். சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்து, நமது மரபுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம்’, இவ்வாறு கமல்ஹாசன் அதில் தெரிவித்துள்ளார்.
The hallmark of a true democracy is the ability of its citizens to disagree and engage in continued discussion. History has repeatedly taught us that asking the right questions has led to important answers and contributed to our development as a better society.@Udhaystalin is…
— Kamal Haasan (@ikamalhaasan) September 7, 2023