ராகவாலாரன்ஸ் தொடங்கிய “மாற்றம்”..!! அந்த மனசு தான் சார் கடவுள்..!!
மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் எந்த அளவிற்கு வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறதோ அதே அளவிற்கு மற்றொரு நற்செய்தியும் தமிழகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.., குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
நடிகரும் நடன இயக்குனருமான ராகவாலாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் ஹீரோவாக இல்லை நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்கிறார்.., அவர் செய்த உதவிகள் ஏராளம் என சொல்லலாம் “ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை” என்ற ஒன்றை தொடங்கி அதன் மூலம் ஊனமுற்ற இளைஞர்களுக்கான பாதுகாப்பகம் மற்றும் உதவிகள் என ஆரம்பித்தார்.,
கடந்த சில நாட்களுக்கு முன் கணவனை இழந்த பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி பரிசளித்தார்., அதன் பின் 14ஊனமுற்ற இளைஞர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக கொடுத்தார்..
இதுவரை இவரால் பயன் அடைந்தவர்களே பலர் என சொல்லலாம் அந்த வகையில் அனைவரும் பயன் பெற வேண்டும் என நினைத்த “ராகவா லாரன்ஸ்” மாற்றம் என்ற ஒன்றை தொடங்கப்போவதாக கடந்த சில நாட்களுக்கு எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார்..,
Hi Friends and fans, On this Special “Labour’s Day”, I’m very Happy to begin #Maatram journey under the initiative “Service is god” through Our charitable trust. As a first start 10 Tractors will be provided with my own money for Farmers – The backbone of our country. Everyone do… pic.twitter.com/AjuuNOhLSA
— Raghava Lawrence (@offl_Lawrence) May 1, 2024
அதில் KPY பாலா, அறந்தாங்கி நிஷா மற்றும் SJ.சூர்யா உட்பட ராகவா லாரன்ஸ் அவரது ஆசிரம்பத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இணைந்திருந்தார்கள்.,
அவர் என்ன மாற்றம் கொண்டு வரப்போகிறார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் அதை பற்றிய வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்..
இந்த மாற்றம் இயக்கத்தில் சேர்வது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார் அதில் அவர் கூறியதாவது,

இந்த மாற்றம் அமைப்பின் மூலம் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் நான் செய்வேன்.., “ஃபார் மை பாய் சீசர்” என்ற சினிமா வசனத்தையும் பதிவிட்டு இருந்தார்..
இதுகுறித்து KPY பாலா வெளியிட்டிருந்த பதிவில் மே 1 அண்ணன் லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து புதிய மாற்றத்தை கொண்டு வர போகிறோம்..,
தொடர்ந்து பலருக்கும் எனக்கு உதவ ஆசை ஆனால் அதை நான் மட்டும் தனியாக செய்ய முடியாது. அதற்கான “மாற்றம்” மே 1 தெரியவரும் அதற்கு உங்களின் ஆதரவும் தேவை என பதிவிட்டு இருந்தார்..
இப்படி அனைத்து பிரபலங்களும் மாற்றம் பற்றி வெளியிட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது.., அதன் முதல் தொடக்கமாக ஏழை விவசாயிகள் 10பேருக்கு இலவச டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார்.,
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் மாஸ்டர் வெளியிட்டுள்ள பதிவில் “இன்று உழைக்காப்பாளர்கள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்.., உங்களின் ஆசீர்வாதத்தோடு “சேவை அறக்கட்டளை” தொடங்கியுள்ளோம்..,
அதன் முதல் அன்பளிப்பாக தமிழ்நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு இலவச டிராக்டர்கள் வழங்கியுள்ளோம்.., இவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இனி தொடர்ந்து உதவ போகிறோம். என பதிவிட்டிருந்தார்”
உதவி தேவைப்படும் மக்களுக்காக சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த அறம் தன்னலமற்றது.., இவை தொடர்ந்து இயங்க உங்களின் உதவி மட்டும் போதும் வார்த்தையை விட செயல் சுத்தமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்..,
இதுகுறித்து KPY பாலா கூறியதாவது இதுவரை நான் செய்த உதவிகளுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தது போல இனியும் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்., இதுவரை நான் தனியாக செய்த உதவியை விட லாரன்ஸ் அண்ணன் உடன் சேர்ந்து உதவி செய்வதை நினைத்து பெருமையாக நினைக்கிறேன்..
என்னை அண்ணன் மாடியில் இருந்து கீழே குதிக்க சொன்னாலும் நான் சந்தோஷமாக குதிப்பேன் என சொன்னார்..,
இவர்களின் இந்த செயலுக்கு அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.. ராகவாலாரன்ஸ் மாஸ்டர் தொடங்கி இருக்கும் இந்த மாற்றத்திற்கு மதிமுகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…