விஜய்-அஜித் படத்தால் கடுப்பான இயக்குனர்..!! தோல்வி பயத்தில் சிவகார்த்திகேயன்..!!
தற்போது சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வசூல் படைத்துள்ளது.., சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்வதற்கான காரணம்.., இந்த ஆண்டு வெளியான சில படங்கள் வசூல் பெறாததால் 90ஸ் மற்றும் 80ஸ் களில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்த படங்களை எச்டி குவாலிட்டியில் மாற்றி தற்போது திரை அரங்கு உரிமையாளர்கள் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்..
தமிழ்நாடு முழுவதும் உள்ள திரை அரங்கில் பையா, சென்னை-600028, யாரடி நீ மோஹினி, அழகி, 3, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது..
இது எல்லாம் என்ன வசூல்..? வசூல் என்றால் இப்படி தான் இருக்கனும் என்று சொல்வதை போல சொல்லி அடிச்ச படம் தான் “கில்லி” தளபதி விஜய் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று சொல்லும் அளவிற்கு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி 10 நாளில் 10கோடி வசூல் செய்தது..,
அதன் தொடர்ச்சியாக இன்று பில்லா-2, தீனா போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.., ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் இந்நிலையில் ரீ-ரிலீஸ் செய்யப்படங்களால் தன்னுடைய படங்கள் flop ஆக போகிறது என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்..
இந்நிலையில் சுந்தர்.சி தயாரிப்பில் வெளியாக இருக்கும் அரண்மனை-4 படமும், சிவகார்த்திகேயன் எஸ்.கே புரடக்ஷன் தயாரிப்பில் எடுக்கப்பட்ட “குரங்கு பெடல்” என்ற படமும் நாளை மறுநாள் திரையில் வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் கூட இன்னும் ஆரமிக்கவில்லை
அதே சமயம் அஜித் விஜய் படங்களுக்கு இன்னும் ஒரு வராம் டிக்கெட் புக்கிங் ஹவுஸ் புல் ஆகி இருப்பதால்.., அரண்மனை-4 மற்றும் குரங்கு பெடல் போன்ற படங்கள் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி மற்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளனர்.
தற்போது அஜித் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருப்பதால், நாளை மறுநாள் வெளியாக இருக்கும் குரங்கு பெடல் படம் வசூலை அள்ளுமா என்பது சந்தேகம்..? எனவும் இதனால் மீண்டும் பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்..
அரண்மனை-4 மற்றும் குரங்கு பெடல் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷ்னில் இடம் பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..