போலி ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை கொள்ளை அடித்த திருடன்.. ! போலீசில் சிக்கியது எப்படி..?
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம், பல்லடம் மற்றும் திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரே மோசடி மீண்டும் மீண்டும் அரங்கேரி வந்தது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அவர்களது ஏடிஎம் கார்டை வைத்து பணம் திருடுவதாக தான் அந்தப் புகாரில் குறிப்பிடப்படிருந்தது..
புகாரின் பெயாரில் போலீசார் நடத்திய சோதனையில் திண்டுக்கல் மாவட்டம் மடூர், புகையிலைப்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த கோபால் மகன் பன்னீர்செல்வம் (வயது 29) என்பது தெரிய வந்தது இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையிலே பல தகவல்கள் வெளிவந்தது.
முதலில் பன்னீர்செல்வம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல் ஏடிஎம்மிற்கு சென்று அங்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை முதலில் குறி வைத்து. அதன் பிறகு அவர்களுக்கு தானாக வந்து உதவி செய்வது போல உதவி செய்வார். அப்போது பணம் எடுக்கத் தெரியாத முதியவர்களுக்கு உதவி செய்வது போல அவர்களின் ஏடிஎம் பின் எண்ணை தெரிந்துக்கொள்வாறாம்.
அதன் பிறகு முதியவர்கள் கேட்கும் பணத்தை மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக்கொடுக்கும் பன்னீர்செல்வம் முதியவர்களின் ஏடிஎம் கார்டை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கமால். அதற்கு பதிலாக அவர் ஏற்கனவே போலியாக வைத்திருந்த ஏடிஎம் கார்டுகளை முதியவர்களிடம் கொடுத்து விடுவாராம்.
முதியவர்கள் ஏடிஎம்மில் இருந்து சென்ற பிறகு. அவர்களின் கார்டை வைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று விடுவாராம். அதன் பிறகு கைவரிசை காட்டும் பன்னீர்செல்வம் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். அதை அவர் வழக்கமாகவே செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தாராபுரத்தில் தொடர்ந்து ஏடிஎம்மில் இருக்கும் பணம் தானாக எடுக்கப்படுவதாகவும் தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் போலீசாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது புகார்களின் பேரில் தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி, தலைமையில் போலீசார் தனி படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் ஏடிஎம் மையங்களை ஆய்வு செய்தனர். அப்போது தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஏடிஎம்மில் சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போதே இந்த உண்மைகள் வெளிவந்தது…
மாஸ் அணிந்தும் தொப்பி அணிந்தும் டீசண்டான இளைஞர் போலவும். சில நேரங்களில் ஆபிசர் போலவும் தன்னை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 10, மாதங்களாக பல லட்சம் ரூபாய் வரை பணத்தை கொள்ளை அடித்ததை போலீசாரிடம் திருடன் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவனை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்…
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..