மர்ம முறையில் வாலிபர் கொலை…!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்…!!
திருப்பத்தூர் அருகே வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர பகுதியில் கடந்த ஆக்ஸ்ட் மாதம் 21ஆம் தேதி கோணாமேடு மற்றும் காமராஜபுரம் பகுதி இளைஞர்களிடையே மேளம் அடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக காமராஜபுரத்தை சேர்ந்த சந்துரு என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கொலை வழக்கில் கோணமேடு பகுதியைச் சேர்ந்த ஜான் என்கின்ற ராஜ்குமார், ஸ்ரீதர், கார்த்தி, அப்புனு ஆகிய 4 பேரை வாணியம்பாடி நகர காவல்துரையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் நான்கு பேரும் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் மீதான விசாரணையானது நாளை நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் எனவும் காவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.