உத்திரபிரேதச மாநிலத்தில், இஸ்லாமிய மாணவனை அடிக்கச் சொல்லி, சக மாணவர்களை வகுப்பு ஆசிரியை ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய மாணவர் ஒருவரை அடிப்பதற்கு இந்து மாணவர்களை பெண் ஆசிரியை ஒருவரே ஊக்கப்படுத்துவது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.வீடியோவில், இந்த சம்பவம் நிகழ்ந்த தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. முசாபர் நகரின் குப்பபூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முசாபர்நகர் காவல்துறையின் பொறுப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருக்கின்றனர். ஒரு மாணவர் மட்டும் ஆசிரியைக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். ஒரு மாணவர் வந்து நின்று கொண்டிருந்த இஸ்லாமிய மாணவரின் கன்னத்தில் அடித்து விட்டுச் செல்கிறார். அதன் பின்னர் மேலும் இரண்டு மாணவர்கள் வந்து இஸ்லாமிய மாணவரின் கன்னத்திலும், பின்புறத்தில் பளார் என்று அடித்து விட்டுச் செல்கின்றனர்.ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்; வேகமாக அடியுங்கள் என்று ஆசிரியை சொல்வது வீடியோவில் கேட்கிறது. அந்த ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்பது தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. காவல் நிலையத்திற்கு இந்த விவகாரம் சென்று விட்ட நிலையில், ஆசிரியை போலீஸார் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆசிரியைக்கு எதிராக புகார் கொடுக்க விரும்பவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். அந்த பள்ளிக்கு, தன் மகனை இதற்கு மேல் அனுப்பப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
This lady is an absolute disgrace to humanity!
Such nation full of monsters we have become.
No shame.
No fear.
Not an ounce of humanity.
Losing hope. #Pathetic #Inhuman #Muzaffargar #UttarPradesh #DeathOfHumanity https://t.co/uLpaPArcrp— Revathi (@revathitweets) August 25, 2023