ஆத்தூர் சிறையில் கைதிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்கும் பணி தீவிரம்..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதி பகுதியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இச்சிறை சாலையில் கைதிகள் 200 பேர் அடைக்கப்படும் வசதி உள்ளன. இந்நிலையில் தற்போது 46 கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட சிறை கண்காணிப்பாளராக வைஜெயந்தி உள்ளார். இந்நிலையில் சேலத்தில் உள்ள மத்திய சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராய ஊறல் கண்டெடுக்கப்பட்டது.
சிறை வளாகத்திற்கு உள்ளேயே சாராய ஊறல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து எதிர்க்கட்சசியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
சிறைச்சாலையிலே சாராய ஊழல் கண்டெடுக்கப் பட்டதன் எதிரொலியாக சிறையில் கைதிகளை கண்காணிக்கும் விதமாக ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை பகுதிகளில் ஐந்து இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறை வளாகத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிறை கைதிகளில் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..