“தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது..” வைரலாகும் தவெக பாடல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சியின் தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார்.. இந்நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர்.
இரண்டு சிவப்பு நிறங்களுக்கு, நடுவே மஞ்சள் நிற கொடியில் அதன் நடுவே இரண்டு போர் யானைகளுக்கு , நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பாடலும் வெளியிடப்பட்டது.., முழுக்க 3டி கிராபிக்ஸில் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் தொடக்கத்திலேயே யானை மீது அமர்ந்து கொண்டு சிலர் மக்களை துன்புறுத்துகின்றனர். அப்போது கையில் காப்புடன் குதிரையில் வரும் தளபதி போன்ற ஒருவர், தனது இரு யானைகள் மூலம் அந்த கொடுரர்களை வீழ்த்துவது போல அந்த பாடல் 3டி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
குறிப்பாக “தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது” என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது. அது எம்ஜிஆரை குறிப்பதாக தெரிகிறது. “சிகரம் கிடைத்த பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு, நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது” என்ற வரிகள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வருவதை குறிப்பிடுவதாக எழுதப்பட்டுள்ளது.
முக்கியமாக பாடலின் இடையில் தவெக கொடியை ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்துவர் ஏந்தி நிற்பதைப் போல ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. அதன் மூலம் மதநல்லிணக்கமே தனது பாதை என்பதை இந்த பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
“அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி”, “தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது” இந்த வரிகளானது சில அரசியல் தலைவர்களையும் அவர்கள் செய்யும் தவறுகளையும் தட்டி கேட்கும் ஒரு தலைவராக விஜய் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..