சின்னமும் காலி..! இனி கட்சியும் காலியா..? வாயை விட்டு உலறிய சீமான்..!
இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7கட்டமாக நடைபெற உள்ள நிலையில் 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிவு வெளியிடுவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை விட குறைந்த வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுகிறேன் என சீமான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.பா ஆதித்தனாரின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “வாயு கசிவை ஏற்படுத்திய கோரமண்டல் நச்சு ஆலை குறித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கியிருக்கும் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாடு அரசு அந்த ஆலையை திறக்க உத்திரவிடக் கூடாது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி அந்த நச்சு ஆலையை திறக்கவிடாது” என்றதோடு, தமிழர்கள் திருடர்கள் என கூறுகிறார் மோடி.
இப்படி தமிழர்களை பற்றி அவதூறாக பேசும் மோடி., தேர்தலுக்கு முன்னே பேசி இருக்க வேண்டும்.. சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்தி இருக்கலாமே..? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார் சீமான்.
அதனை தொடர்ந்து பேசிய சீமான்.., தென்மாநிலங்களில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை நம்புகிறாரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “முதலில் தனித்து நிற்க பாஜக-வுக்கு துணிவு இருக்கா..?
ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு பாஜக தனித்து தான் நிற்கப்போகிறது. கூட்டணியில் பாஜக வாங்கும் வாக்கை விட அவர்கள் தனித்து நின்று வாங்கும் வாக்கை விட நாம் தமிழர் கட்சியை குறைவாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன். என சீமான் சவால் விட்டுள்ளார். சீமான் விட்டுள்ள இந்த புதிய சவால் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ