லட்டு பிரியர்களுக்கு ஒரு டிரீட் இனி வீட்டிலேயே…!
பெரும்பாலும் இனிப்புகளில் அனைவருக்கும் பிடித்தமானது லட்டு. அப்படி பிடித்ததிலும் பிடித்தமான அவலை வைத்து வீட்டிலேயே ஒரு லட்டு வகையை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் – ½ கப்
பொட்டுக்கடலை – ¼ கப்
தேங்காய்த் துருவல் – ½ கப்
வேர்க்கடலை – ¼ கப்
வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய வெல்லம் – 1½ கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பாதாம், முந்திரி – தலா 1 டீஸ்பூன்
செய்முறை:
-
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடு ஆனதும் ஒன்றன் பின் ஒன்றாக அவல், பொட்டுக்கடலை, எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை தனிதனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
பின் வேர்க்கடலையும் வறுத்து ஆறவிட்டு தோல் நீக்கிவிட்டு அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-
அனைத்தும் நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி கம்பி பதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றி கலந்து விட வேண்டும்.
-
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் முந்தரி பாதாம் பருப்பை வறுத்து அதனை அந்த மாவில் சேர்த்து கலந்து லட்டுகளாக பிடிக்க வேண்டும்.
-
அவ்ளோதான் சுவையான அவல் லட்டு தயார். இது உடலுக்கு மிகவும் நல்லது. புரோட்டீன் நிறைந்தது.