வாடிவாசல் கதை பிடிக்கவில்லை..! பிரபல தெலுங்கு நடிகரிடம் பல்பு வாங்கிய வெற்றிமாறன்..!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. 36 வயதினிலே திரைப்படத்தின் தயாரிப்பாளரான சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். அதன் பின் நந்தா, காக்க காக்க, பிதாமகன், போன்ற பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அதிரடி திரைப்படம் வாடிவாசல். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்த நிலையில், இதுவரை படப்பிடிப்பு துவங்கபடமால் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இப்படம் கைவிடப்பட்டு விட்டது என பேசி வந்தனர். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை படம் விரைவில் உருவாகும் என வெற்றிமாறன் தெரிவித்து இருந்தார்.
சூர்யாவிடன் படத்தின் படப்பிடிப்பு பற்றி எந்த தகவலும் வரமால் இருப்பதால் வேறு ஹீரோவை வைத்து படத்தை சீக்கிரம் எடுக்க வேண்டும் என வெற்றிமாறன் தெலுங்கு ஹீரோவான ராம் சரணை நாடி இருக்கிறார்.
ராம் சரணிடம் பல்பு வாங்கிய வெற்றிமாறன் :
தெலுங்கு மொழியில் கொடி கட்டி பறக்கும் நடிகர் ராம்சரண். இவரை எப்படியாவது வாடி வாசலுக்கு கொண்டு வர வேண்டும் என வெற்றிமாறன் மனக்கணக்கு போட்டுள்ளார் வெற்றிமாறன். அதனால் அவரை சந்தித்து வாடிவாசல் திரைப்படத்தின் கதையை கூறியிருக்கிறார் என தகவல் வெளிவந்தள்ளது.
பின்னர், கதையை கேட்ட நடிகர் ராம் சரண் எனக்கு இந்த கதை பிடிக்கவில்லை என யோசிக்காமல் உடனே கூறிவிட்டாராம். இதனால் பெரும் சோகத்தில் வெற்றி மாறன் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
படத்திலிருந்து வெளியேறும் சூர்யா :
இந்த விஷயத்தை கேள்வி பட்ட சூர்யா, வெற்றிமாறன் மீது கோபத்தில் இருக்கிறார். என்றும், இதனால் படத்திலிருந்து வெளியேற அவர் முடிவு செய்துள்ளதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
வெற்றிமாறனின் கதை ஒரு ஹீரோவிற்கு கூடவா பிடிக்காமல் போய்விட்டது. என இந்த தகவலை அறிந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..