பெற்றோர்களுக்கு குட் நியூஸ்..! பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு..!
2024-2025 ஆண்டிற்கான ஆண்டு தேர்வு கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தேர்வு எழுதிய மாணவரகள் தற்போது கோடை விடுமுறையான 1மாதம் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாக உள்ள நிலையில் பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாமா..? என்பது குறித்த முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது பள்ளிகள் திறப்பதற்கான பணிகளை பள்ளிகல்வி துறை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். அதன்படி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் மே மதாங்களில் அதிகரித்து காணப்படும் என்பதால் மாணவர்களின் நலனை கருதி கோடை விடுமுறை என 1மாதம் விடுமுறை அளிக்கப்படும். அந்தவகையில் தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ல் பள்ளிகள் திறக்க பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ