ADVERTISEMENT
பதஞ்சலி நிறுவன விளம்பர சர்ச்சையில் அரசு கண்களை மூடிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்…
பதஞ்சலி நிறுவன விளம்பர சர்ச்சையில் அரசு கண்களை மூடிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இனி தவறான விளம்பரங்களை செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி நிறுவனம் இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவை மீறி தவறான விளம்பரங்களை வெளியிட்டது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் இதே நிலை தொடர்ந்தால் பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பதஞ்சலி நிறுவனம் மருந்துகள் மீது தவறான தகவல்களைப் பரப்பும் அனைத்துவித மின்னணு, அச்சு ஊடக விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.