மிலாடி நபி பிறந்த கதை…!! ஷியா சமூகத்தின் வேறுபட்ட வரலாறு..!!
மிலாடி நபி (அ) மிலாது நபி கொண்டாட்டம் :
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் நபிகள் நாயகம் உல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாள் பிறந்தார் (உல் அவ்வல் இஸ்லாமிய மதத்தில் குறிப்பிடப்படும் ஒரு மாதம்) நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னே அவருடைய தந்தை இறந்துவிட்டதாக சொல்லபடுகிறது., நபிகள் நாயகத்தின் தாயாரும் அவர் பிறந்து 6 வருடத்திலேயே காலமானார்., இதனால் நபி அவரது தாத்தா முகமது அவர்களின் வீட்டில் வளர்ந்து வந்தார்
சிறு வயதிலியேயே அனைவரிடமும் அன்பாகவும் நம்பிக்கையை விதைத்தவர் என போற்றப்பட்டவர்.. வாழ்க்கையில் ஒழுக்கம் மற்றும் உண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என நினைபவர்கள் நபிகள் நாயகத்தை கடவுளாக நினைத்து வழிபடுவார்கள். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாது நபி என கொண்டாடுகிறோம். இன்று உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மதத்தினர் மிலாது நபி கொண்டாடி வருகின்றனர்..
முகமது அவர்களிடம் முழு ஆசியையும் பெற்றுக்கொண்ட நபிகள் நாயகம் இஸ்லாமிய மதத்தின் கடைசி தீர்க்கதரிசி என பல புராண கதைகளில் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இறைவன் முகமது நபிகள் வழியாக வெளிப்படுத்தினார்..
இந்த புனித நூலை நபிகள் பாயகம் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு சேர்த்தவர். எல்லா தீர்க்கதரிசிகளிலும் மிகவும் சிறந்தவராக முகமது நபிகள் போற்றப்படுகிறார். வாழ்க்கை முழுவதிலும் அவர் உண்மை மற்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார்.
ஷியா சமூகத்தினர் கூறும் வேறுபட்ட வரலாறு :
ஆனால் இந்த மிலாடி நபி கொண்டாட்டம் அறிவிக்கப்பட்ட போது சுன்னி சமூகத்தினர் மற்றும் ஷியா சமூகத்தினர் இடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக நபிகள் நாயகத்திற்கு அடுத்தபடியாக ஹஸ்ரத் அலியை தேர்ந்தெடுக்க வேண்டுமென ஷியா சமூகத்தினர் நம்புகின்றனர்.
சமய வழிபாட்டு பாடல்கள் பாடப்படும் :
முதலாவதாக இந்த வழிபாட்டில் நபிகள் நாயகத்திற்கு இறை வழிபாட்டு பாடல்கள் பாடி நபிக்கு அர்ப்பணிப்பு செய்துவிட்டு இதர வழிபாடுகளை செய்வது வழக்கம் என சொல்லபடுகிறது. இந்த பாடல்களை பாடுவதற்கான முதல் காரணம் நம்முடைடிய பிரச்சனைகள் விலகி நன்மை பிறக்க வேண்டும்
என்பதற்காக ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்காலத்தில் நன்மையையும் இறந்த பிறகு ஆசீர்வாதத்தையும் கொடுக்கும். இந்த நாள் முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது
நன்கொடைகளுக்கு அதிக முக்கியத்துவம் :
ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விழாவிலும் நன்கொடைகள் அதிக முக்கியத்துவம் பெறும். அது போலவே இஸ்லாமிய மதத்திலும் நன்கொடைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஏழைகளுக்கு தானம் தருவது ஒரு நடைமுறையாக இங்கு கருதப்படுகிறது. உணவு மற்றும் இனிப்புகளை தேவை உள்ளவர்களுக்கு இந்நாளில் வழங்குவது மரபு. வீடுகளை அலங்கரித்து நபிகள் நாயகத்தின் எழுச்சியூட்டும் கதைகளை கூறும் ஊர்வலங்களும் நடைபெறும்.
இந்த நாளில் பலவித கொண்டாடட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு. வாழ்க்கை முழுவதும் ஒழுக்கத்தை கடைப்பிடித்த நபிகள் அவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. மக்கள் இதே குணங்களை தனக்குள் வளர்த்துக் கொள்வதால் அவர்களுடைய வாழ்வும் சிறப்பானதாக மாறும்.