ஹாங்காங்கை தாக்கிய புயல்..!! குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் ரெட் அலர்ட்..!!
ஹாங்காங்கில் கொய்னு என்ற சூறாவளி புயல் பயங்கரமாக தாக்கியுள்ளது.., இதனால் அங்கு கனமழையும் பலத்த காற்றும் வீசி வருகிறது…
ஹாங்காங்கில் இன்று ஒரு சில இடங்களில் மணிக்கு 144 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தைவானை தாக்கிய கொய்னு புயல், தற்போது சீனாவின் ஹாங்காங் நகரை சேதம் செய்துள்ளது.
இதனால் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறான சீற்றமாக உள்ளன. ஹாங்காங்கில் பலத்த காற்றும் கனமழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 144 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.. தைவானில் வீசிய புயலால் 400 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்…
தைவான் பகுதிக்கு.., ரெட் அலர்ட் விடுத்துள்ளனர்..