தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்..!! களத்தில் இறங்கிய அன்பில் மகேஷ்..!! எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள்..!!
சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.., அதனால் ஒருசில இடங்களில் ஆசிரியர்கள் கைதும் செய்யப்பட்டனர்..
ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால் ஆசிரியர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்..
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நேற்று ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து 7 நாட்களாக போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் 3 பிரிவு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்..
அவர்கள் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் என்றதால் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
அதே சமையம் வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை :
மற்றொரு பக்கம் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி தர முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்.
* தற்போது ரூ.10,000 சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 2,500 உயர்த்தப்பட்டு ஆசிரியர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்..
தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நியமானம் செய்யப்படுவார்கள் எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலினுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் இடையில் நடந்த ஆலோசனைக்கு பின்னரே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருப்பதால் கட்டாயம் இவை நிறைவேற்றப்படும் எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடுமாறு.., அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளனர்..
மேலும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்துள்ளனர். இவர்களின் கோரிக்கையில் முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் எனவும் அவர் தெரிவித்தார்..
Discussion about this post