இலங்கை அரசின் புதிய “குழந்தை பெட்டி” திட்டம்..! இனி ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பு..?
குழந்தை பிறந்ததும் அவர்களை வளர்க்க விருப்பம் இல்லாத பெற்றோர்கள் , குப்பை தொட்டியில் வீசி விட்டு செல்கிறார்கள். ஒரு சிலர் அவர்களை வீதியில் விட்டு விடுகிறார்கள். இதனால் பல குழந்தைகள், பாலியல் துன்புறுத்தல், பிச்சை எடுப்பது போன்றவற்றிற்கு ஆளாக்கப் படுகின்றனர்.
கடந்த 5 வருடங்களில் மட்டும் 60க்கும் மேற் பட்டோர் குழந்தைகளை வீதியில் விட்டு சென்றுள்ளனர். அதில் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகள் மட்டும் 150க்கும் மேல் இருக்கின்றார்கள். 80 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளனர்.
இதனை கணக்கெடுப்பின் போது குழந்தைகள் பராமரிப்பு சேவைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே குழந்தைகளை பாதுகாக்க “குழந்தை கள் பெட்டி” என்ற ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
இதனால் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீச நினைக்கும் பெற்றோர்கள், இந்த “குழந்தைகள் பெட்டியில்” விட்டுச் சென்றால், குழந்தைகள் அரசின் கீழ் பாதுகாக்கப் படுவார்கள். அவர்களை விட்டுச் சென்றவர்கள் மீதும், எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள படாது.
இதனால் குழந்தைகள் பாதுகாக்க படுவார்கள். தவறான வழிமுறையில் செல்ல மாட்டார்கள் என “சிறுவர்கள் பராமரிப்பு துறை அதிகாரி என்.ஐ. லியனகே” கூறினார்.
Discussion about this post