சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் ஆரம்பிக்க உள்ளது.
நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடர் அமளிலே முடிந்ததால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக நடைப்பெற முடியாமல் இருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்தமாக தற்போது 5 நாள் கொண்ட சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்செப்டம்பர் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார். இது, புதிய கட்டிடத்துக்கு நாடாளுமன்றம் இடம்பெயருவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா கொண்டுவரப்படுவதாகவும், நாட்டின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றுவதற்கான நடைமுறைகளும் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சனாதன தர்மத்துக்கு எதிரான சில எதிர்க்கட்சி பிரமுகர்களின் பேச்சுகள் நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பின. அதற்கு மத்திய மந்திரிகள், பா.ஜனதா நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.