கோலாகலமாக தொடங்கிய சிறுவாபுரி முருகன் கோவில் வருஷாபிஷேக விழா
ஊத்துக்கோட்டை பெரியபாளையம்.., ஆரணி அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி.., அதிமூலர் நவகிரகங்கள் தவிர விக்ரகங்கள், மரகத பச்சை கல்லால் ஆனா சிலை அனைத்தும் குறிப்பிடதக்கது.
இங்குள்ள மூலவரை தரிசனம் செய்தால்.., வாஸ்து தோஷம் மற்றும் திருமணதடை ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம். சிறப்பு மிக்க இக்கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கும்பாபிஷேகத்திற்கு பிறகு கோவில் சிற்பங்கள் மற்றும் கோபுர சிலைகள் அனைத்தும் மிக பொலிவுடன் காணப்பட்டுள்ளன.
இந்த கும்பாபிஷேகத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூலவர் சன்னிதி, அண்ணாமலையார் சன்னிதி, விநாயகர் சன்னிதி, பரிவார ..சன்னிதிகள், ராஜகோபுரம் ஆகியவை புதுப்பித்தல், மதில் சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைத் தளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல, ‘க்யூ’ அமைத்தல், குடிநீர் வசதி போன்ற பணிகள் முடிந்து,…
விழாக்கள் நடந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், நேற்று கோவிலில் வருடாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றுள்ளது. யாக சாலைகள் அமைத்து பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை செய்யப்பட்டது.., இந்த கும்பாபிஷேகத்திற்காக மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்றுள்ளனர்.
Discussion about this post