வேலூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது
வேலூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கனயவியல் துறை மற்றும் நீரிழிவு துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் எம்.சி கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கனயவியல் துறை மற்றும் நீரிழிவு துறை சார்பில், உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு போஸ்டர் கண்காட்சி மற்றும் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
இதனை கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ராஜேஷ் துவங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் உண்ண வேண்டிய உணவுகள் மற்றும் தவிக்க வேண்டிய உணவுகள், மற்றும் உடற்பயிற்சி குறித்து இடம் பெற்றிருந்தது. இதனை திரளான நோயாளிகளும், பொதுமக்களும் பார்த்து பயனடைந்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.