வெடிகுண்டு தயாரித்த பள்ளி மாணவன்…!! பரபரப்பான புதுச்சேரி…!!
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியின் வகுப்பறையில் காதலி போன்று குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த +1 மாணவர், சக மாணவனை கத்தியால் வெட்டியது மட்டுமின்றி புத்தகப்பையில் யூடியூப்(YouTube) பார்த்து தயார் செய்த 6 நாட்டு வெடிகுண்டை பள்ளிக்கு எடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, மூலகுளம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு பிரிவினர்களாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதோடு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தும் வந்துள்ளனர். இதனிடையே ஒரு தரப்பை சேர்ந்த மாணவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட மற்றொரு தரப்பை சார்ந்த மாணவர் ஒருவர் அந்த மாணவியின் பெயரில் போலி முகநூல் அக்கவுண்ட் தொடங்கி அந்த மாணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது அந்த மாணவரும் தனது காதலி தான் என நினைத்து அதில் வரும் தகவல்களுக்கு ரிப்ளை செய்துள்ளார்.
இப்படியாக 3-மாதங்களாக முகநூலில் சாட் செய்துள்ளனர். மேலும் போலி முகநூல் கணக்கு மூலம் மெசேஜ் அனுப்புவதை கண்டுபிடித்த அந்த மாணவன், சக மாணவனிடம் கேட்ட போது அவர் கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் தனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலி முகநூல் மூலம் மெசேஜ் அனுப்பி ஏமாற்றிய சக மாணவனை வகுப்பறையில் வைத்து கை பகுதியில் வெட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அவரிடம் இருந்து கத்தியை பிடுங்கினார் மேலும் லேசான காயமடைந்த மாணவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து கத்தியை வைத்திருந்த மாணவனின் பையை சோதனை செய்ததில் அதில் 6-நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததும் அந்த குண்டுகள் (வெடிக்காத அளவிற்கு) யூடியூப் பார்த்து தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக *பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பு மற்றும் பள்ளி தரப்பில் இருந்து புகார் அளிக்காத காரணத்தால் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..