இறந்தும் எட்டு பேருக்கு மறு வாழ்வு கொடுத்த இளைஞர்..!!
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது என்று கார்ல் மார்க்ஸ் கூறியது போல நிக்கல்சன் என்ற இளைஞர் சாலை விபத்தில் இறந்தும் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்தது மூலம் எட்டு பேருக்கு மறு வாழ்க்கை கொடுத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் நிக்கல்சன்.26 வயதே ஆன இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அப்பகுதியில் எலக்ட்ரிசியனாக வேலை செய்து வந்துள்ளார்.
இவரின் தந்தை ரவி ஆனந்த் ஃபெயின்ட் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார்.இவரது தாய் காந்திமதி வீட்டை கவனித்து வருகிறார். வீட்டில் நான்காவது பையனான நிக்கல்சன் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கழிப்த்தூரில் இருந்து சிப்காட் செல்லும் வழியில் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானார்.
தலைக்கவசம் அணியாமல் சென்றதால் தலையில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சென்னையில் உள்ள அடுத்தடுத்து இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றும் சிகிச்சை பயனளிக்கவில்லை. இந்த நிலையில் இறுதியாக சேலையூரில் உள்ள பாரத் மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் நிக்கல்சன் மூளைச்சாவு அடைந்தாக மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் நிக்கல்சனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் குடும்பத்தினர் முன்வரவே நேற்று இரவு அவரின் உடலில் இருந்து 2 கிட்னி, நுரையீரல்,இதயம்,கல்லீரல் ஆகியவை தேவையான மருத்துவமனைக்கு எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் மூலம் எட்டு பேருக்கு புது வாழ்வு கிடைக்கும் என மருத்துவர்கள் கூறினார்கள்.இதனால் நிக்கல்சன் இறந்தும் உயிர் வாழ்கிறார். இதுகுறித்து பேசிய நிக்கல்சன் சகோதரர் என்னுடைய தம்பி நிக்கல்சன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பைக்கில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானார்.
இந்நிலையில் நேற்று இரவு என்னுடைய தம்பி மூளைச்சாவு அடைந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மண்ணுக்கு தானே உடல் போக போகிறது.அது நான்கு பேருடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டோம். அந்த வகையில் இன்று என்னுடைய தம்பியின் உடல் உறுப்புகள் தானம் செய்யபடுகிறது.
இளைஞர்கள் அனைவரும் வாகனத்தில் செல்லும் போது தலைகவசம் அணிந்து செல்லுங்கள்.வேகமாக செல்லாதீர்கள் என்று கூறினார். இதுகுறித்து பேசிய மருத்துவர் இளங்கோ இன்று நம்முடைய மருத்துவமனையில் 25 வயதாகும் என்ற நிக்கல்சன் இளைஞர் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்கிறார். அவருடைய குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனால் எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும். உண்மையில் இது ஒரு சோகமான சம்பவம் இருந்த நிகழும் வண்டியில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை மிகவும் பாதிப்படைந்தால் மூளைச்சாவடைந்துள்ளார்.
அவர் மூளைச்சாவு அடைந்தால் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செய்வதினால் சமுதாயத்தில் ஒரு எட்டு பேர் திரும்ப வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர் இதயம் நுரையீரல் கிட்னி மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளை தானம் செய்கிறார். இதே போல உடல் உறுப்புகளை தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். இது ஏன் என்றால் தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் செய்து இருந்து பல பேர் உள்ளனர். இவர்களுக்கு இன்னொரு வாய்ப்புகள் கிடைக்கும். இந்தியாவைப் பொருத்தவரைக்கும் உடல் உறுப்பு தானத்தில் மிகவும் பின்தங்கி உள்ளனர்.ஆனால் தமிழ்நாடு ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடம் எந்த ஒரு பணமும் கேட்கப்படாது. இது முழுக்க முழுக்க இலவசம்தான். 50 வயதிற்கு குறைவானவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய தகுதி உடையவர்கள். இதே நோய் இருக்கிறவர்கள் மற்ற உறுப்புகளை செய்யலாம் அது போல தொற்று நோய் இருக்கிறவர்கள் உடல் உறுப்புகளின் பயன்படுத்த முடியும்.அவர்கள் மற்ற தொற்று நோய் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
உடல் உறுப்புகளை கள்ள சந்தையில் விற்பது மிகவும் கடினம்.அந்த அளவுக்கு சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதனால் உடல் உறுப்பு தானங்கள் மிகவும் நம்பிக்கைக்குரியது என்று கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..