சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழக வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களோடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
தற்போது பல்கலைகழகத்தில் வேவ்வேறு காலத்தில் தேர்வு நடக்கிறது. மேலும் வருகிற காலத்தில் அனைத்து பள்ளியில் முடிவுகள் வெளியீடுவதை போல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே நாளில் பட்டபடிப்புகளின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறிய அவர் ஒரே நாளில் தேர்வு, ஒரே நாளில் தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்….
மாநில கொள்கை தான் நமது கல்வி கொள்கை, ஆளுநர் அவர்கள் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் சிலவற்றை செய்து வருகிறார்.மேலும் ஆளுநர் கூட்டத்துக்கு துணை வேந்தர்கள் செல்வது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.துணை வேந்தர்கள் கலந்து கொள்வது அவர்கள் விருப்பம் கலந்து கொள்ளாமல் இருந்தால் நல்லது என்று தெரிவித்தார்…
Discussion about this post