டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த அவசரச்சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என டெல்லி காங்கிரஸ் கமிட்டி அக்கட்சியின் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் விவகாரத்தில் டெல்லி அரசிற்கே அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது இந்த தீர்ப்பை மாற்றி அமைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது அதனை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டமாக மாற்றுவதற்கும் மத்திய அரசு முனைப்பு காட்டி வரக்கூடிய சூழலில் இந்த சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவையில் இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கூறி மேற்கு வங்க மாநிலம் முதல்வர் மமதாபாணர்ஜி மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவு தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் பாஜக ஆட்சி செய்யாத மாநில முதல்வர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறார்.
அவர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கூறிவரும் நிலையில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்திக்க முயற்சிகள் எடுத்து வருகிறார்
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் மொத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் என்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில்டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த அவசரச்
சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது
ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு மற்றும் தேர்தல் சமயத்தில் அக்கட்சியுடன் கூட்டணி போன்றவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது என டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே விடம் நேரில் வலியுறுத்தி உள்ளனர்
அதே போல்
அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனிப்பட்ட முறையில் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தங்களது முடிவாக கூறியுள்ளது.
பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் கிட்டத்தட்ட இதே முடிவை தான் தெரிவித்ததாக தகவல்கள் சொல்லப்படுகின்றது.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அதிகாரத்தை ஆம் ஆத்மி கட்சி தான் படித்தது என்பது குறிப்பிடத்தக்கது