வெளிவந்த பேஸ்புக் காதலன் உண்மை முகம்..! இளம்பெண் அதிர்ச்சி..! போலீசில் சிக்கியது எப்படி..?
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர், மும்பையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் இடையே, பேஸ்புக் மூலமாக காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த பெண்ணை சந்திக்க சென்னை வரும்போது, எல்லாம் இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்வது வழக்கமாம். இவ்வாறு இருக்க, தனது காதலை பெற்றோரிடம் கூறிய அந்த இளம்பெண், திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.
பின்னர், இதுகுறித்து காதலனிடம் கூறியபோது, சாதியை காரணமாக சொல்லி, அவர் அந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து நழுவ பார்த்துள்ளார்.
காதலனின் உண்மை முகத்தை கண்டு அதிர்ந்துபோன இளம்பெண், தாம்பரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விக்னேஷ்வரனை கைது செய்து, நிதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்