ஆயிரத்து 100 வருட கல்வெட்டு.. கண்டுபிடித்த தொல்லியல்துறை..!
தொல்பொருள் ஆராய்ச்சி என்பது, ஒரு நாட்டின் பழமையான வரலாற்றை தெரிந்துக் கொள்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்று.
இதற்கு முன்பு, நாம் எப்படி இருந்தோம் என்ற தகவலின் மூலம், நமது தற்போதைய பிரச்சனைகளையும், தற்போதைய வாழ்க்கை முறையையும் நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
இவ்வாறு இருக்க, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி குழுவினர், ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக்களை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 1,100 ஆண்டுகள் பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவில்பாளையத்தில் உள்ள தளிகீஸ்வரர் கோயிலில் மேற்கொண்ட ஆய்வின்போது, 9 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்