குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளின் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….
திருப்பத்தூர் மாவட்டம் குழந்தைகளுக்கான நடைபயணம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு, திருப்பத்தூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து, குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமாவளவன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கையெழுத்திட்டனர்.
இதில், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை மற்றும் வன்முறைகளை தடுத்தல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.