ADVERTISEMENT
மக்களே உஷார்…. ”டெங்கு காய்ச்சல்”
காய்ச்சல் அறிகுறியின் காரணமாக கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் வட்டார அலுவலர் மணிமாறன் அறிவுறுத்தலின் பெயரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியாளர்களால் உருவான குழு கந்தர்வகோட்டையின் ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலையில், டெங்குத்தடுப்பு நடவடிக்கைகள், டயர்களை அகற்றுதல், செடிகளை கண்காணிப்பது போன்ற தூய்மை பணிகள் நடைபெறுகிறது.
கொசுக்களை அழிக்க புகைமருந்து அடிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கசாயம் சுகாதார மையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.