உதயநிதி ஸ்டாலின் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு…
சனாதன தர்மம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு மீதான விசாரணை 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நல்லது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தேசிய அளவில் விவாதப் பொருளாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது. உதயநிதி ஸ்டாலின் தரப்பில், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளப்பட்டது.
அப்போது, குறுக்கீட்ட நீதிபதிகள், நீங்கள் ஒரு சாமானியர் அல்ல. அமைச்சராக இருந்து கொண்டு பேசும்போது எதிர்விளைவுகளையும் உணர்ந்து பேச வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
அமைச்சராக இருக்கும் நபர் இதுபோன்று பேசினால் என்ன நடக்கும் என்பது தெரியாதா என கேள்வி எழுப்பிய நிதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு சென்று தடை உத்தரவை பெற்றுகொள்ள அறிவுறுத்தினர்.
மேலும், இந்த மனு மீதான விசாரணையை வரும் 15- ஆந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.