மதுரை மாட்டுத்தாவணியில் அதிகரித்த பூக்களின் விலை..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் என்பவர் சென்னைக்கு செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . தகவல் அறிந்த வந்த ரயில்வே காவலர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் மேல்காலனி பகுதிக்கு குடிநீர் வழங்காததை கண்டித்தும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டும் குடிநீர் வழங்காததை கண்டித்தும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டி பழவேற்காடு காட்டூர் மீஞ்சூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் மாற்று வழியாக திருப்பி அனுப்பப்பட்டன.
வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சமாதானம் செய்து இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஆவணி மாத தொடக்கம் மற்றும் விஷேச நாட்களை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.300க்கு விற்பனையான மல்லிகை பூ ரூ.1,500க்கும் முல்லை, பிச்சி ஒரு கிலோ தலா ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும் விற்பனை ஆகிறது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..