உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் :
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சனிக்கிழமை ஆவணி மாத பிறப்பு மற்றும் சனி பிரதோஷம் மேலும் வரும் திங்கட்கிழமை பௌர்ணமி தினங்களை முன்னிட்டு மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர், இந்நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் :
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடைபெற்றது இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிம் செலுத்தப்பட்டது பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் சேண்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையானது மிகவும் தாழ்வாக குறைந்த உயரத்துடன் கட்டப்பட்டு வருகிறது.
இதன் மூலம் எவ்வாறு நீரை தேக்கி வைக்க முடியும் எனவும் மேலும் ஏரிகளுக்கு எப்படி நீர் செல்லும் எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பினார்கள் மேலும் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது அதனை கணக்கீடு செய்து அரசு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அடுத்த சாம்பசிவபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் அருகாமையிலேயே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் தோன்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை தடுத்து நிறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அவர்கள் கூறுகையில் இந்த குளம் குடியிருப்பு அருகில் தோண்டப்படுவதால் அப்பகுதியை சேர்ந்த சிறிய பிள்ளைகள் குளத்தில் மூழ்கி விபத்து ஏற்படும் என தெரிவித்து குளத்தை தோண்டப்படும் இடத்தை மாற்ற வேண்டுமென தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 100 நாள் வேலை திட்டத்தின் மேற்பார்வையாளர் மற்றும் ரத்தினகிரி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குளம் தோன்டும் இடத்தினை மாற்றம் செய்து போராட்டத்தினை கைவிட செய்தனர்.
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் குளம் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த குளத்தை பறவைகள் சரணாலயமாக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. மேலும் இந்த குளத்தை சீரமைக்கவும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பராமரிக்கவும் தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்பொழுது மத்திய அரசு ராம்சார் குறியீடு பட்டியலில் இக்குளத்தை இணைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இக்குளத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதுடன் பல்வேறு பாதுகாப்பும் கிடைக்கும் என இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்கான நடைபாதை, பார்வையாளர் உயர்மட்ட அரங்கு போன்றவற்றை அமைத்து முழுமையான பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் எனவும் அரசு விரைந்து பறவைகள் சரணாலயத்திற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..