சவுக்கு சங்கர் வழக்கு..!! குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி வெளியிட்ட உத்தரவு..?
சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் கோவை 3 -வது குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும், ஒவ்வொரு வழக்கிற்காக ஒவ்வொரு ஊராக தன்னை அழைத்து செல்வதால், இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
காவல்துறை பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த 16 வழக்குகளையும் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் அவர் மீது பதியப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்க மனு தாக்கல் செய்யவும் அவருக்கு அனுமதி அளித்தது.
இதனிடையே முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரி, சவுக்கு சங்கர் தரப்பினர் கோவை 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது., அதனை விசாரணை செய்த நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனாலும் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு குண்டர் சட்டம் இருப்பதால், அவர் சிறையிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..