மலையாள சினிமா உலகை புரட்டிப் போட்ட ஒரேயொரு அறிக்கை.. கேரள அரசின் அதிரடி முடிவு..!
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, MeToo என்ற ஹேஷ்டேக் மூலம், பல்வேறு பெண்கள், பிரபலங்கள், சினிமாத்துறையினர் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியிலான தாக்குதல்களை வெளிப்படையாக கூறினர்.
இந்த இயக்கம், பெண்ணியவாதிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வகையில், தற்போது மலையாள சினிமா உலகில், நீதிபதி ஹேமா அறிக்கை, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில், மலையாள சினிமா உலகில், பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதில் இருந்து, பல்வேறு பெண் நடிகைகள் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை, இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், காவல்நிலையத்தில் இவர்கள் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை.
இதனால் MeToo-வை எதிர்கொள்ள கேரள மாநில அரசால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்