நெல்லையின் புதிய மேயர் பெயரை அறிவித்த அமைச்சர்கள்..!
நெல்லை புதிய மேயராக திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு தேர்நதெடுக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது அதன் பிறகு அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 51 வார்டுகளில் திமுக கூட்டணி தற்போது வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்தே திமுக கவுன்சிலர்கள் முன்னாள் மேயர் சரவணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அளித்துள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டும், மாமன்ற உருப்பினர்கள் பங்கேற்காததால், நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது. அதையடுத்து மேயராக இருந்த சரவணன் இன்று பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நாளை காலை 10.30 மணிக்கு மேயர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கவுள்ள நிலையில் மேயர் யார் என்பது பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது நெல்லையின் புதிய மேயராக திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..