இரு சக்கர வாகனத்தில் இறங்கி ஓடிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் லாரி மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்-மோனிஷா தம்பதியின் இரண்டாவது மகன் ஜோனத்தான் ராஜ். இவர் தாய் மோனிஷாவுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் வழியில் கடைக்கு சென்ற நிலையில், இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி சிறுவன் ஓடிவந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடியதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
