ADVERTISEMENT
பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம்…
மயிலாடுதுறையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கணேசன் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சங்கர ராமநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு என்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிராமணர்களின் முன்னேற்றத்துக்கு தனி நலவாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.