“நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம்”
4 மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரைவுப்படுத்த, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகிய அமைச்சர்களை நியமித்துள்ளார்.
மேலும், கனமழையால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து 8148539914 என்ற தமிழ்நாடு அரசின் வாட்ஸ் ஆப் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்த, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்குள்ள மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் திருநெல்வேலி பெல் பள்ளி வளாகத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாவட்டம் முழுதும் 20 முகாம்களில் 985 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
