இந்திய நாடு இபோதுதான் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. முழுமையாக கொரோனா தோற்று ஒழிக்கப்படுவதற்குள் இந்தியாவில் ஆங்காங்கே புதிய வைரஸ் தோற்று பரவ தொடங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முதன் முறையாக ஜிகா வைரஸ் தோற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர் வெளியீட்ட அறிக்கையில், ராய்ச்சூர் மாவட்டம் மான்வி அருகே கோழி கேம்ப் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு சில தினங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் சிந்தனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்ததால் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அவரது உடலில் இருந்து ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டன. பின்னர் டெங்கு மற்றும் சிக்குன் குனியா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால் அவர் தனிமைபடுத்தபட்டு மேல் சிகிச்சைக்காக பெல்லாரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் தலைவலி இருப்பதாகவும், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள 150 குடும்பங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கட்டுள்ளது. மேலும் ஜிகா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும், தொற்றை கண்டறியவும் நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இதேபோல் கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.